கண்டி நகர பாடசாலை ஒன்றில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கண்டி நகர பாடசாலை ஒன்றில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


கண்டியின் திரித்துவ கல்லூரி (Trinity College) உத்தியோகபூர்வ அலுவலகங்களில் வசித்து வரும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கண்டி மாநகர ஆணையாளர் அமில நவரத்தின இதனை தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே, இங்கு அமைக்கப்பட்டுள்ள அலுவலக வீடொன்றில் வசித்து வந்த 63 அகவைக்கொண்ட பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.


இதனையடுத்து அங்குள்ளவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனைகளின் போதே இந்த 13 பேரும் கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.


ஏற்கனவே கண்டி நகரின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மூடப்பட்டுள்ள மூன்று பாடசாலைகளில் கண்டி திரித்துவ கல்லூரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


இதேவேளை இந்த மூன்று பாடசாலைகளை தவிர ஏனைய 42 பாடசாலைகளும் நாளை (14) திறக்கப்படவுள்ளன.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post