இளைஞர்களை நண்பனாக பார்க்கும் நாமல் நாட்டில் எதிர்கால ஜனாதிபதி! 

இளைஞர்களை நண்பனாக பார்க்கும் நாமல் நாட்டில் எதிர்கால ஜனாதிபதி! 

வடக்கு மற்றும் கிழக்கு இளைஞர்களை நண்பனாகப் பார்க்கும் நாட்டின் எதிர்கால ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவார் என மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பா. சந்திரகுமார் தெரிவித்தார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி மாநாடு நிகழ்வு நேற்று (13) மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் பா. சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.


அதனடிப்படையில் மட்டக்களப்பு தொகுதிக்கான மாநாடு இருதயபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


$ads={2}

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி இணைப்பாளரும், தலைவருமாகிய ந. வேணுகோபன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டிற்கு பிரதம அதிதிகளாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னனியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பா.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் முன்னேற்றத்தினை கருப்பொருளாக கொண்டு இடம்பெற்ற இம் மாநாட்டில் அதிகளவிலான இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post