கொழும்பு கிங்ஸை எதிர்த்து கோல் க்ளாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றி! இறுதி போட்டிக்கு தெரிவு!

கொழும்பு கிங்ஸை எதிர்த்து கோல் க்ளாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றி! இறுதி போட்டிக்கு தெரிவு!


எல்.பி.எல். முதலாவது அரையிறுதி போட்டியில் கோல் க்ளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.


கோல் க்ளாடியேட்டர்ஸ் அணிக்கும், கொழும்பு கிங்ஸ் அணிக்குமான எல்.பி.எல். முதலாவது அரையிறுதி போட்டி இன்று (13) ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றது.


நாணய சுழற்சியை வென்ற கோல் க்ளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.


அதனடிப்படையில், முதலில் களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி சார்ப்பில் டேனியல் ட்ரமன்ட் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.


$ads={2}


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் க்ளடியேட்டர்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.


அதனடிப்படையில் முதலாவது அணியாக கோல் க்ளடியேட்டர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.


நாளைய தினம் இரண்டாவது அரையிறுதி போட்டி ஜப்னா ஸ்டாலியன் மற்றும் தம்புள்ள வைக்கிங் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post