நேற்று மட்டும் இலங்கையில் 11,000 இற்கும் மேற்பட்ட PCR சோதனைகள்!

நேற்று மட்டும் இலங்கையில் 11,000 இற்கும் மேற்பட்ட PCR சோதனைகள்!

கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண இலங்கையில் நேற்று மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, 11ஆயிரத்து 60 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.


$ads={2}

கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியில் இருந்து இதுவரை நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பி.சி.ஆர். பரிசோதனைகள் எண்ணிக்கை 11 இலட்சத்து 92 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.

இவற்றில் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதியே அதிக எண்ணிக்கையிலான அதாவது 17 ஆயிரத்து 425 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post