மேலும் 10 இடங்கள் முடக்கம்!

மேலும் 10 இடங்கள் முடக்கம்!


கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

அக்கரைப்பற்று பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட அக்கரைபற்று 5,14, மற்றும் 03, ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்


$ads={2}

இதுதவிர அட்டாளைச்சேனை பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட பாலமுனை 01, ஒலுவில் 02, அட்டாளைச்சேனை 8, ஆலையடிவேம்பில் உள்ள 8/01, 8/03 மற்றும் ஆலையடிவேம்பு 9 ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மொனராகலை மாவட்டத்தின் அலுபொத்த கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post