நேற்று இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்!

நேற்று இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின்போது கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 616 பேரில் 266 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அந்த மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.


$ads={2}

கொழும்பைத் தவிர்த்து நேற்றைய தினம் கண்டி மாவட்டத்தில் 99 பேர், கம்பஹா மாவட்டத்தில் 94 பேர், களுத்துறை மாவட்டத்தில் 48 பேர், இரத்தினபுரி மா வட்டத்தில் 31 பேர் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 24 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்ட்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 பேர், மாத்தறை மாவட்டத் தில் 08 பேர், கேகாலை மாவட்டத்தில் 08 பேர், புத்தளம் மாவட்டத்தில் 04 பேர், குருணாகல் மாவட்டத்தில் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், காலி மாவட்டத்தில் 03 பேர், நுவரெலியா, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தொ்ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 05 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ’ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 25 ஆயிரத்து 652 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து தொற்றுக்கு உள்ளான 8 ஆயிரத்து 925 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post