09 வயது சிறுவன் உமருக்கு எம்.பி ஹரீன் பெர்னாண்டோ வழங்கிய 30 இலட்சம் பெறுமதியான நத்தார் பரிசு!

09 வயது சிறுவன் உமருக்கு எம்.பி ஹரீன் பெர்னாண்டோ வழங்கிய 30 இலட்சம் பெறுமதியான நத்தார் பரிசு!


நேற்று (19) சனிக்கிழமை பதுளையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நிகழ்வொன்றில் 30 இலட்சம் பெறுமதியான முற்றிலும் தன்னிச்சையாக இயங்கக் கூடிய ஒரு சக்கர நாற்காலியை (Automatic Wheel Chair) பிறப்பிலேயே அங்கவீனமுற்ற 09 வயது சிறுவன் உமருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கெளரவ சஜித் பிரேமதாச அவர்களின் கரங்களினால் வழங்கி வைத்தார்.


$ads={2}


இந்த சக்கர நாற்காலி  பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ அவர்களின் தந்தை சுகவீனமுற்று இருந்தபோது அவருக்காக செய்ததும் அவரினால் அதை பாவிக்க முடியாமல் இறையடி சேர்ந்து விட்ட நிலையில் அவரின் பெயரில் கிறிஸ்துமஸ் பரிசாக உமருக்கு வழங்கி வைத்தார்.


மேலும் உமரின் தந்தை சகோதரர் முஹம்மது இஷாம் அவர்களுக்கும் கெளரவ ஹரீன் பெர்னாண்டோ அவர்கள் அமைச்சராக இருந்தபோது குவைத் நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் வேலைவாய்ப்பு ஒன்றையும் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தகவல்:

ஹிதாயத் சத்தார்

முன்னால் உறுப்பினர்

மத்திய மாகாண சபை

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post