கண்டி - மடவளை YMMA யின் 13ஆவது இரத்ததான முகாம்!

கண்டி - மடவளை YMMA யின் 13ஆவது இரத்ததான முகாம்!


கண்டி வைத்தியசாலை இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க மடவளை YMMA இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 13ஆவது இரத்ததான முகாம் எதிர்வரும் 15.12.2020 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் சிரிமல்வத்தை வீதியில் அமைந்திருக்கும் Guardian Banquet மண்டபத்தில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


கடந்த 12 வருடமாக எம்மால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம்களில் தாங்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ததை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுவதுடன் இவ்வருடமும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சுகாதார வழிமுறைகளை 100% கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால் இம்முறை 150 நபர்கள் மாத்திரம் இரத்த தான பங்களிப்பை நல்க முடியும் என வைத்திய வட்டாரங்கள் தெரிவித்தன.


எனவே இம் முறை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தனது உடல் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்திக்கொண்டவர்கள் மாத்திரம் தங்களது,


பெயர்:

முகவரி:

தொலைபேசி இலக்கம்: 


ஆகியவற்றை 0771631313 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வாட்ஸாப் அல்லது SMS மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு பணிவாய் வேண்டிக்கொள்கின்றோம்.


ஏ.எம் ஹசன் பிராஸ்

செயலாளர்-YMMA மடவளை


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post