சாதாரண தர பாடத்திட்டங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் வேண்டுகோள்!

சாதாரண தர பாடத்திட்டங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் வேண்டுகோள்!

ministry of education sri lanka yazhnews

எதிர்வரும் ஜனவரி மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் உரிய முறையில் நிறைவு செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


இது குறித்து உரிய பாடத்திட்டங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, நாடளாவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளில் தரம் 11 வகுப்புக்கான கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, https://info.moe.gov.lk எனும் இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து, ஆசிரியர்கள் தமது கருத்துக்களை முன்வைக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.


அத்துடன், இன்று முதல் ஒரு வார காலத்துக்குள் இந்த விபரங்களை சமர்ப்பிக்குமாறு ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


$ads={2}


மேலும், ஆசிரியர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி இந்த இணையத்தளம் மூலம் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், குறித்த இணையத்தளம் ஊடாக எந்தவொரு ஆசிரியருக்கேனும் தமது கருத்துக்களை முன்வைக்க முடியாத பட்சத்தில், [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post