ஒரு பௌத்தனாக முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கை முன்வைக்கிறேன்! -எம்.பி ஹர்ஷண ராஜகருணா

ஒரு பௌத்தனாக முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கை முன்வைக்கிறேன்! -எம்.பி ஹர்ஷண ராஜகருணா


உலக சுகாதார அமைப்பின் அனுமதிக்கமைய முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இது அரசியல் இலாபத்துக்கோ அல்லது ஒரு இனம், மதத்துக்காக வேண்டிக்கொள்வதல்ல என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,


கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம் சகோதரர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஒரு பெளத்தனாக இருந்து அரசாங்கத்தை கேட்கின்றேன். அரசியல் இலாபத்துக்கோ அல்லது ஒரு இனம், மதத்துக்காக வேண்டிக்கொள்வதல்ல.


உலக சுகாதார அமைப்பு அந்த விடயத்தை அனுமதித்துள்ளதுடன், 200 நாடுகளில் கொரோனாவால் மரணித்தவர்களை அடக்கம் செய்கின்றன. அதனடிப்படையிலே இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன்.


அத்துடன் உலக சுகாதார அமைப்பின் கோரிக்கைகளை பின்பற்றுவதில் அரசாங்கம் இரட்டை வேடம் போடுகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை ஏன் இதுவரை கொண்டுவராமல் இருக்கின்றது என நான் அரசாங்கத்திடம் கேட்டபோது, உலக சுகாதார அமைப்பு கொரோனாவுக்கு இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.


$ads={2}


ஆனால் கொரோனா தொற்றால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தும் அதனை பின்பற்றுவதில்லை. அதேநேரம் உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிக்கு அனுமதிக்கவில்லை என்பதற்காக தடுப்பூசி கொண்டுவருவதில்லை. ஏன் இவ்வாறு இரட்டை வேடம் போடவேண்டும் என கேட்கின்றேன்.


அதனால் அரசாங்கம் உலக சுகாதார அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் அடக்கம் செய்வதற்கும் அனுமதிக்க வேண்டும். மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கருத்துக்கு எதிர்க்கட்சியில் இருக்கும் எந்த கட்சியும் எதிர்ப்பு இல்லை. அனைவரும் ஆதரவாகவே இருக்கின்றனர். ஆனால் அரசாங்கத்தில் இருப்பவர்களே அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கு எதிரான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றனர் என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post