உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவை ஆளப் போகும் ஜோ பைடன் யார்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவை ஆளப் போகும் ஜோ பைடன் யார்?


உலகின் மிகப் பெரிய வல்லரசுகளின் ஒன்றரான அமெரிக்காவின் ஜனாதிபதியாக மக்களால் தோ்வு செய்யப்பட்டிருக்கிறார் ஜோ பைடன்.


பென்சில்வேனியாவில் வெற்றி பெற்றதன் மூலம் 253 இடங்களுடன் முன்னிலையில் இருந்து வந்த பைடனுக்கு வெற்றிக்குத் தேவையான 270 பிரதிநிதிகள் சபைவாக்குகளைக் கடந்து 273 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.


மேலும் சில மாகாணங்களில் முன்னணியில் உள்ள நிலையில் அவருக்கு 300 வரையான உறுப்பினர்களின் ஆதாரவு கிடைக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவை ஆளப்போகும் ஜோ பைடன் யார்?


பைடன் ஒன்றும் பெரிய குடும்பப் பின்னணியைக் கொண்டவரல்ல. அல்லது வாரிசு அரசியல் மூலம் இந்தப் பதவியை அடைந்தவரல்ல. மிக எளிய பின்னணியை கொண்டது அவரின் குடும்பம்.


சாதாரண கார் விற்பனைப் பிரதிநிதியின் மகனாகப் பிறந்து தனக்கிருந்த அரசியல் திறமையால் படிப்படியாக வளர்ந்து இன்று முழு உலகமும் தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் பைடன்.


அவா் ஒன்றும் எடுத்த எடுப்பில் உச்சம் தொட்டவரல்ல. பல தசாப்தங்கள் அமெரிக்க அரசியலில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சுவைத்தவர்.


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ரஸ்ட் பெல்ட் என்ற சிறிய நகரத்தில் 1942-ம் ஆண்டு நவம்பர் 20-ஆம் திகதி பிறந்தார் ஜோசப் ராபினெட் பைடன்.


பெற்றோர் சூட்டிய இந்தப் பெயரை தனது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு ஜோ பைடன் என மாற்றிக்கொண்டார்.


$ads={2}


வேலையிழப்பு


1950-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஜோ பிடனின் தந்தைக்கு வேலை பறிபோனது. சொந்த ஊரில் பிழைக்க வழியில்லை என்பதால் ரஸ்ட் பெல்ட் நகரில் இருந்து டெலாவேருக்கு குடிபெயர்ந்தது ஜோ பைடனின் குடும்பம்.


அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராகப் போராடிய பைடன், டெலாவேரில் கருப்பின மக்களின் பாதுகாவலராக அறியப்பட்டார்.


இளம் பிராயத்திலேயே அரசியல் மீது பைடனுக்கு ஆர்வம் அதிக ஆா்வம் இருந்தது. மகனின் அரசியல் ஆசையை உணர்ந்த ஜோ பிடனின் தந்தை, பிடனை அவரது விருப்பப்படி சிராகியூஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க வைத்தார். அதன் பின்னர் இனவெறிக்கு எதிராகத் தொடர்ச்சியாக பிடன் போராடி வருகிறார்.


$ads={2}


முதல் மனைவி கொலை


ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துகொண்டிருந்த ஜோ பைடனுக்கு 1972-ஆம் ஆண்டு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று நடந்தது.


கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக பொருட்களை வாங்கச் சென்றிருந்த ஜோ பைடனின் மனைவி நெலியா மற்றும் மகள் நவோமி கார் விபத்தில் பலியாகினர். இரண்டு மகன்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். முதலில் விபத்தாக கருதப்பட்ட நிலையில் அது எதிரிகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலை என்பது ஜோ பைடனுக்கு பின்னர் தெரிய வந்தது.


$ads={2}


இரண்டாவது திருமணம்


முதல் மனைவி இறந்த நிலையில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்த ஜோ பைடன்1975-ம் ஆண்டு முதல் ஆசிரியை ஜில் என்பவரை காதலித்து 1977-ஆம் அவரைத் திருமணம் செய்துகொண்டார்.


ஜோ படைனுக்கும் -ஜில் ஜாக்கபுக்கும் 1981-ஆம் ஆண்டு ஆஷ்லி என்ற பெண் குழந்தை பிறந்தது.


ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்த நிலையில் அதில், மூத்த மகன் பியூவை தனது அரசியல் வாரிசாக வளர்த்தெடுத்தார் ஜோ பைடன்.


ஆனால் எதிர்பாராத விதமாக மூளை புற்றுநோய் காரணமாக பியூ கடந்த 2015-ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


ஜோ பைடனின் மற்றொரு மகனான ஹண்டர் போதைக்கு அடிமையாகி தனது எதிர்காலத்தையே சிதைத்துக்கொண்டார்.


கடமையின்போது போதைப் பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை பிரிவில் இருந்து ஹண்டர் நீக்கப்பட்டார் . ஜனநாயக கட்சி ஆட்சியிலிருந்தும் மகனுக்காக எந்த சிபாரிசுக்கும் ஜோ பைடன் செல்லவில்லை.


$ads={2}


33 ஆண்டுகள் கனவு


அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என்பது ஜோ பைடனின் 33 ஆண்டு கால கனவு. 1987-ம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் உட்கட்சி தேர்தலில் தோல்வியை தழுவினார்.


ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது 8 ஆண்டுக்காலம் துணை ஜனாதிபதியாக இருந்தார்.


2015-இல் மகன் மரணமடைந்ததால் அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த பிடன் 2016 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை.


$ads={2}


அரசியல் பதவி


ஜோ பிடன் 1972-ஆம் ஆண்டு தனது 29-வது வயதில் டெலாவேர் மாகாணத்தில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அமெரிக்க வரலாற்றில் இளம் வயதில் செனட் உறுப்பினரான படைன், மிக அதிக வயதில் (77 வயது) அமெரிக்க ஜனாதிபதியான முதல் நபர் என்ற சாதனையையும் இப்போது படைத்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.