மேல் மாகாணத்தில் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரூ .5000 விநியோகிக்க பொருளாதார புத்துயிர் மற்றும் வாழ்க்கை செலவு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலைப்பரவல் காரணமாக கொழும்பு, கம்பஹா, மற்றும் களுத்தரை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
$ads={2}
ரூ .10,000 மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் கொண்ட பொதிகளை மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, தங்கள் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்க பணிக்குழு முடிவு செய்துள்ளது.
பொருளாதார புத்துயிர் மற்றும் வாழ்க்கை செலவு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ, பணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பொதிகளின் விநியோகத்தை செயல்படுத்த மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)