இந்திய தூதரக ஊழியருக்கு கொரோனா உறுதி!!

இந்திய தூதரக ஊழியருக்கு கொரோனா உறுதி!!

இந்திய தூதரகத்தின் ஊழியர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்இந்திய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் துணை பணியாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தூதரகம் தெரிவித்துள்ளது.


$ads={2}

தற்போது அவர் இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பகுதியில் மருத்துவகிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தூதரகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஊழியரின் பணி காரணமாக அவர் தூதரக அலுவலகத்துடனும் அதிகாரிகளுடனும் சிறியளவிற்கே தொடர்பிலிருந்தார் என தெரிவித்துள்ள தூதரகம் அவருடன் தொடர்பிலிருந்த மிககுறைந்த எண்ணிக்கையிலானவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உருவாகி வந்த சூழ்நிலை காரணமாக தூதரகம் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான ஊழியர்களுடனேயே சில வாரங்களாக இயங்கிவந்துள்ளதாகவும் தூதரகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post