வீட்டில் மரணிப்போருக்கு PCR தேவையா? சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை!

வீட்டில் மரணிப்போருக்கு PCR தேவையா? சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை!

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் சில பிரதேசங்களில் வீடுகளில் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களிடமும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், எவ்வாறான மரணங்களில் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

$ads={2}

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வைத்தியசாலைகளில் மரணிப்பவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொரோனா தொற்றாளரின் நெருக்கமானவர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர்கள் மரணித்தால் மாத்திரம் அவர்களிடம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கு அப்பாற்பட்டு உயிரிழப்போருக்கு PCR மேற்கொள்ள தேவை இல்லை என தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post