கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்?

கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்?


இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில் மாற்றுத் திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது.


இந்நிலையில், கட்டார் அல்லது மாலைதீவு போன்ற முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்புடன், அந்த நாடுகளுக்கு கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எடுத்துச்சென்று, நல்லடக்கம் செய்வது குறித்தும் சில தரப்புக்கள் ஆராய்ந்துள்ளன.


இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவை பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


மேலும், முஸ்லிம் செல்வந்தர்கள் இவ்வாறான ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு தம்மால் 100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கித்தர முடியுமெனவும் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.


தற்போது இலங்கை - கட்டார் விமான சேவைகள் தினமும் நடந்துவரும் நிலையில் இத்திட்டத்தை சாதகமாக்கலாமெனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


அத்துடன் இதுபற்றிய இறுதி அறிக்கை துறைசார் வைத்தியர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் கிடைக்குமென முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் சகோதர செய்தித்தளம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தினார். மேலும் சட்டத்துறை மற்றும் அரசியல்துறை வட்டாரங்களும் இத்தகவலை உறுதி செய்துள்ளன.


$ads={2}


இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுகப்பட்டவில்லை என்றபோதிலும் இத்திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post