கருவாடு மற்றும் மாசி போன்றவற்றிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!!

கருவாடு மற்றும் மாசி போன்றவற்றிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!!

கருவாடு மற்றும் மாசிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் மீன்வளத் துறையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் இந்து ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

$ads={2}

 இறக்குமதி வரி அதிகரிப்பானது அக்டோபர் 27 முதல் அமுல் செய்யப்பட்டுள்ளது, வரி சதவீதத்தின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ மீன் மீதான வரி ரூ.200 ஆகும்.

 கருவாடு இற்கான இறக்குமதி வரி ரூ. 127 மற்றும்  ஒரு கிலோ மாசிக்கான இறக்குமதி வரி ரூ. 302 ஆக உள்ளது.

தற்போது இலங்கையில் மீன் பிடி துறையில் அதிகளவான வருவாய் இருப்பதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார். 

 இதன் விளைவாக உள்நாட்டில் கருவாடு மற்றும் மாசிக்கான உற்பத்தியும் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post