ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்; CID விசாரணையில் வெளிவந்த உண்மை!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்; CID விசாரணையில் வெளிவந்த உண்மை!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவர்களின் மனைவிமார்கள் மற்றும் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன,உள்ளடங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்ததை அடுத்து, அமைச்சர் சம்பிக ரணவக்கவின் முன்னாள் ஊடக செயலாளர் இன்று (17) சிஐடிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.


அமைச்சர் சம்பிக ரணவக்கவின் முன்னாள் ஊடக செயலாளரரான தணுஷ்க ராமநாயக்க விசாரணையின் பின்னர் வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அந்த புகைப்படம் உண்மையானது எனவும் அவர் அதனை உள்ளே உறுதி செய்ததாக கூறினார்.


$ads={2}


அந்த இடத்தின் புகைப்படங்களை எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அத்தகைய புகைப்படம் எவ்வாறு ஊடகங்களுக்கு வந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டதாக அவர் கூறினார்.


சிஐடியின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் தனது சமூக வலைதள கணக்கிலிருந்து குறித்த  படத்தை அகற்றி, தனது கையடக்கத் தொலைபேசியின் முழுமையான நகலை சிஐடியிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post