சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா மரணம் பதிவு!

சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா மரணம் பதிவு!

சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா மரணம் பதிவு!

இலங்கையில் இன்றைய தினம் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.


அதன்படி,

1. கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஆண். கொரோனா நோய்த் தொற்று தொடர்பில் வெலிகந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயர் குருதியழுத்தம் மற்றும் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இரத்மலானையை சேர்ந்த 69 வயதான பெண். தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3. கிருலப்பணை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான பெண். தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4. கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் ஏற்பட்ட நியூமோனியா காரணமாக இந்தப் பெண் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5. தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான ஆண். அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கொரோனா ஆகியனவற்றினால் இவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக பதிவாகியது.

அதேநேரம் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 401 ஆக பதிவாகியது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post