முஸ்லிம்களின் உடல் எரிப்பு விவகாரம்; ஐ. நா வின் இலங்கைக்கான பிரதிநிதிக்கு எதிராக பிக்குமார் குழு கண்டனம்!

முஸ்லிம்களின் உடல் எரிப்பு விவகாரம்; ஐ. நா வின் இலங்கைக்கான பிரதிநிதிக்கு எதிராக பிக்குமார் குழு கண்டனம்!

கொரொனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை தகனம் செய்யும் செயற்பாட்டை மாற்றுமாறு கோரி இலங்கை அரசாங்கத்துக்கு வலியுறுத்தல் விடுத்திருந்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிக்கு எதிராக பிக்குமார் குழு ஒன்று விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

மக்கள் பொறுப்பு மையத்தின் தலைவர் ஜம்புராவல சந்திரரட்ன தேரர் இந்த விடயத்தை கண்டித்துள்ளார்.


அவர் தலைமையிலான குழுவினர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு சென்று இலங்கை விவகாரங்களில் ஹானா சிங்கரின் தலையீட்டை எதிர்த்து மனு ஒன்றை கையளித்துள்ளனர்.


$ads={2}


கொரோனாவினால் காவு கொள்ளப்படும் உடலங்களை அகற்றுவதற்கான ஒரே வழி தகனம் மட்டுமே என்ற இலங்கை சுகாதார அமைச்சின் கூற்று குறித்து ஹானா சிங்கர் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post