துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு அரசியல் பழிவாங்கல்! ஜனாதிபதி ஆணைக்குழுவில் புகார்!

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு அரசியல் பழிவாங்கல்! ஜனாதிபதி ஆணைக்குழுவில் புகார்!


மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வெலிக்கடை சிறையில் சிறைவாசகம் அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மரண தண்டனை தொடர்பான தீர்ப்பு அவருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் என குற்றம் சாட்டி, அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.


குறித்த புகார் ஜனாதிபதி ஆணையத்தின் பொலிஸ் பிரிவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை முந்தைய அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கடுமையான அரசியல் பழிவாங்கல் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் இந்த புகாரை வரும் நாட்களில் அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post