ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதாக வெளியான செய்தி ஒரு வதந்தி மாத்திரமே!! சுகாதார அமைச்சு தெறிவிப்பு!!

ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதாக வெளியான செய்தி ஒரு வதந்தி மாத்திரமே!! சுகாதார அமைச்சு தெறிவிப்பு!!

கொரோனா வைரஸினால் உயிரிழப்போரின் சடலங்களை புதைப்பதற்கு இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரொனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியதாக நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளரென அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்திருந்தன.

$ads={2}

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு இஸ்லாமிய அமைப்புக்கள் தமது நன்றிகளையும் வெளியிட்டிருந்தன.

கொரொனா தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வது குறித்தும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த ஜனாஸாக்கள் மன்னாரில் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய தற்போது ஆராயப்படுவதாக அறிய முடிகின்றது.

எனினும், இவ்வாறு பரவிய செய்தி எவ்வித
தீர்மானமும் எட்டப்படாத ஒன்று எனவும் இது முற்றிலும் வதந்தியென சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.