நுவரேலியா - மஸ்கெலியாவில் 12 வயது மாணவிக்கு கொரொனா!!

நுவரேலியா - மஸ்கெலியாவில் 12 வயது மாணவிக்கு கொரொனா!!

நுவரேலியா - மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் – பிரொக்மோர் பிரிவில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று (10) அடையாளம் காணப்பட்டார் என்று சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

12 வயதுடைய மாணவியொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. கடந்த 5 ஆம் திகதி PCR பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இன்று காலை PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில் குறித்த மாணவிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

சிறுமியின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கடந்த 5 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

$ads={2}

கொழும்பில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த அவர் அண்மையில் வீட்டுக்கு வந்திருந்த வேளை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post