ஹம்பாந்தோட்டை கொரோனா மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் இன்று (10) உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை கொரோனா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சுரங்க உபேசேகர தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் களனி ஹெட்டிகொட பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
$ads={2}
கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த நபர் கடந்த 1 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பெற்ற பின்னர், இன்று வீட்டிற்கு செல்லும் போது இருதய பிரச்சினை காரணமாக ஹம்பாந்தோட்டையில் உள்ள புதிய பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நோயாளி இதற்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்தார்.