
முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு சொந்தமான சர்ச்சைக்குரிய பெட்டிகலோ கெம்பஸ் தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு கையகப்படுத்தி வேறொரு அரசாங்க பல்கலைக்கழகத்துடன் இணைக்கவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர், காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
$ads={2}
பல்கலைக்கழங்களுக்கான மாணவர்கள் அதிகளவில் உள்வாங்கப்படவுள்ள நிலையில் பெட்டிகலோ கெம்பஸின் வளங்களும் அதற்காக பயன்படுத்தப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான குழுநிலை விவாதத்தின் 04ஆம் நாளான இன்று கடற்றொழில், பெருந்தோட்டம் மற்றும் காணி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கங்கள் குறித்த விவாதம் இடம்பெற்றிருந்தது.