மாணவர்கள் மத்தியில் இணையக்கல்வி தோல்வியடைந்துள்ளது; இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு!

மாணவர்கள் மத்தியில் இணையக்கல்வி தோல்வியடைந்துள்ளது; இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு!


கொரோனா தொற்றின் போது இணையத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.


சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஊடகம் ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,


பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணையங்களுக்கான வசதிகளை கொண்டிருக்கவில்லை. அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ‘மொபைல் சிக்னல்’ என்ற தொலைபேசியின் அலை வீச்சின் செயற்பாட்டு வலிமை மோசமாகவே உள்ளது.


$ads={2}


மேலும் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும்  தரவுகளும் (DATA Packages) மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் போதுமானதாக இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். கிழக்கு மாகாணத்தில் 30 சதவிகித மக்கள், மேற்கு மாகாணத்தில் 50 சதவிகித மக்கள் ஏனைய மாகாணங்களில் 20 முதல் 40 சதவிகித மக்கள் மாத்திரமே இணைய வசதிகளை கொண்டுள்ளனர்.


எனவே கொரோனா தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு வரும் வரை தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஊடாக பாடங்களை நடத்துவதே சிறந்த தொலைதூர கல்வித் தளமாகும் என ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை இணையக் கல்வியானது, மாணவர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் கையடக்கத் தொலைபேசிகள், கணணிகள், போன்றவற்றில் அடிமையாகி விட்டனர் என்றும் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post