பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை; விண்ணப்பங்களை கோரும் கல்வி அமைச்சு!

பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை; விண்ணப்பங்களை கோரும் கல்வி அமைச்சு!


நாடளாவிய ரீதியில் உள்ள 170 தேசிய பாடசாலைகளில் நிலவிவரும் அதிபர் பதவிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த 06ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


$ads={2}


இந்நிலையில், இதுவரையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் கல்வியமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக விண்ணப்பிக்க முடியுமெனவும் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post