கொழும்பு – கண்டி நெடுஞ்சாலையில் அமைக்கப்படவுள்ள புதிய மாற்றுவழிப் பாதை!

கொழும்பு – கண்டி நெடுஞ்சாலையில் அமைக்கப்படவுள்ள புதிய மாற்றுவழிப் பாதை!


கொழும்பு – கண்டி நெடுஞ்சாலையில் வரக்காப்பொல – அம்பேபுஸ்ஸ நகரங்களுக்கு இடையிலான வாகன நெரிசலைக் குறைப்பதற்கு புதிய மாற்றுவழிப் பாதையொன்று அமைக்கப்படவுள்ளது.


இதன்படி, புதிய மாற்றுப் பாதையை அமைப்பதற்கு 410 கோடி ரூபா வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கமைய, கொழும்பு – கண்டி நெடுஞ்சாலைக்கு சமாந்தரமாக அதன் வலப்புறத்தில் வரக்காபொல – அம்பேபுஸ்ஸ நகரங்களை இணைக்கும் வகையில் இந்தப் பாதை அமைக்கப்படவுள்ளது.


$ads={2}


இதன்படி, இதற்கான நடவடிக்கைகள் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில், குறித்த வீதி அமைக்கப்பட்டதன் பின்னர் வரக்காப்பொல  முதல் அம்பேபுஸ்ஸ வரை வாகன நெரிசல் இன்றி இலகுவாக பயணிக்க முடியும் என நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post