மாகாண சபைத் தேர்தல் நடாத்தும் முறைமை குறித்து அரசு கவனம்!

மாகாண சபைத் தேர்தல் நடாத்தும் முறைமை குறித்து அரசு கவனம்!


மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.


கடந்த நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படவிருந்த போதிலும் எல்லை நிர்ணயம் தொடர்பிலான சர்ச்சைகளினால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.


$ads={2}


மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலா அல்லது புதிய முறையிலா நடாத்துவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


பழைய முறையில் தேர்தல் நடாத்துவது என்றால் அமைச்சரவையின் அனுமதியுடன் தேர்தலை நடாத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.


புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமை அமுல்படுத்தப்படும் திகதியை காலம் தாழ்த்தி பழைய முறையில் தேர்தலை நடாத்த முடியும் என சட்ட வல்லுனர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post