எதிர்வரும் திங்கள் இவர்களுக்கு மாத்திரமே பாடசாலை ஆரம்பம்? ஆசியர்கள் சங்கம் அரசிடம் வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் திங்கள் இவர்களுக்கு மாத்திரமே பாடசாலை ஆரம்பம்? ஆசியர்கள் சங்கம் அரசிடம் வேண்டுகோள்!


வலுவான திட்டம் ஒன்றை தயாரிக்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலையை ஆரம்பிக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.


கடந்த கொரோனா நிலைமையின் போது பாடசாலைகளை திறக்க உரிய நடைமுறைகள் பின்பற்றதாகவும் ஆனால் தற்போது அவ்வாறான நிலைமையை அவதானிக்க முடியவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்தார்.


பாடசாலைகளை மீண்டும் திறக்க வேண்டுமானால், தற்சமயம் கிருமி தொற்று நீக்கம் செய்திருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.


உரிய திட்டமிடல் இல்லாமல் இந்த யோசனை முன் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


$ads={2}


இதேவேளை, இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை பொதுக் கல்விச் சேவை சங்கத்தின் தலைவர் வசந்த ஹண்தபாங்கொட, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திடீர் என பாடசாலைகளுக்கு அனுப்புவதில்லை, பெற்றோருக்கு அறிவித்து விசேட குழுக்களை அமைத்து அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அதனை செயற்படுத்த வேண்டும். அதிபர்கள் அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என கூறினார்.


இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, கொரோனா அச்சுறுத்தல் நிலைமைக்கு பின்னர் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்கும் போது விசேட திட்டத்துடன் அழைப்பது முக்கியம். இதற்கான திட்டத்தை தயாரிக்க காலம் இருந்தது. ஆனால் இப்போது கடந்த வியாழக்கிழமை மாலை பாடசாலைகள் மீண்டும் அடுத்த திங்கட்கிழமை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.  அப்படியானால் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. மேலும், பாடசாலை குழுக்களை அமைக்குமாறு கோரப்படுகின்றது. 


எனவே மீதமிருக்கும் நாளில் அவ்வாறு PHI மற்றும் MOH அதிகாரிகளை கொண்ட குழுவை அமைக்க முடியுமா? தற்போதைய நிலையில் அதனை செய்வது சாத்தியமற்றது என கூறினார்.


ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறுகையில், கொரோனா தொற்று ஏற்படாது என்பதை அரசாங்கம் பெற்றோருக்கு தெளிவுப்படுத்தி உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால் பெற்றோர் தங்கள் பிள்ளைகயை பாடசாலைக்கு அனுப்புவார்கள் என கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.