சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுதேசிய மருத்துவ முறையை பயன்படுத்த தீர்மானம்!

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுதேசிய மருத்துவ முறையை பயன்படுத்த தீர்மானம்!


சிறைச்சாலைகளில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுதேசிய வைத்திய முறையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, மருந்து தயாரிப்புக்கு  தேவையான மூலப்பொருட்களை சிறைச்சாலை வளாகத்தில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.


இதுவரையில் சிறைச்சாலைகளில் 600 இற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதன்படி, அவர்களில்  578 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எனவும், ஏனைய 39 பேர் சிறைச்சாலை ஊழியர்கள் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.


$ads={2}


இந்நிலையிலேயே, சிறைச்சாலைகளில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுதேசிய வைத்திய முறையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post