தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட அபூர்வ நபர்! அவர் கூறும் சுவாரஸ்ய பின்னணி!

தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட அபூர்வ நபர்! அவர் கூறும் சுவாரஸ்ய பின்னணி!


பிரேசிலைச் சேர்ந்த 'டியோகோ ராபெலோ' என்ற நபருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் திருமண திகதி குறிக்கப்பட்டு இருக்கின்றது.


இருப்பினும், அவர்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்சனை எழுந்து வந்த காரணத்தால் இருவரும் பிரிந்ததை அடுத்து உடனே திருமண ஏற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று குடும்பத்தினர் கூறி இருக்கின்றனர்.


இருப்பினும், இதற்கு மணமகன் டியோகா ஒப்புக் கொள்ளவில்லை. மணமகளே இல்லை என்றாலும் கூட திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என அவர் உறுதியாக இருந்துள்ளார்.


இதன் காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையில் குறித்த திகதியில் தன்னைத்தானே திருமணம் செய்ததுடன் இதனை டியாகோ ராபெலோ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.


$ads={2}


அதில், “என்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் இதுவும் ஒன்று, எனக்கு மிகவும் பிடித்த நபர்களுடன் என்னுடைய நேரத்தை செலவழித்தேன்.


மிகவும் சோகமான இந்த நாளை நகைச்சுவையாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றி இருக்கின்றேன். என்னை நானே அதிகம் காதலிப்பது அவசியம் என்று தெரிந்து கொண்டேன்." என தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், அவருக்கு பலரும் தன்னம்பிக்கையுடன் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கின்றனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post