நாட்டின் பிரதான பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பிரதான பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!!

கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்குமாறு வேண்டி ஒரே நேரத்தில் விசேட துஆ பிரார்தனைகளில் ஈடுபடுதல்.

சகல ஜும்ஆ / பிரதான பள்ளிவாயல்களின் நம்பிக்கைப் பொறுபாளர்களுக்கு அல்லது பொறுப்பாளர்களுக்கு,

திகதி: 08.11.2020
நேரம்: பி.ப. 5.00 – 6.00 மணி

நாடளாவிய ரீதியில் உள்ள பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதஸ்தலங்களிலும் 08.11.2020 ஞாயிறு தினம் பி.ப. 5.00 மணி முதல் 6.00 மணி வரை ஒரே நேரத்தில் விசேட பிரார்தனைகளை மேற்கொள்ளுமாறு கௌரவ பிரதமரும், புத்தசாசன, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வேண்டப்பட்டுள்ளது.

1. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அபாயகரமான நிலமைகளைத் தொடர்ந்து உலக மக்கள் அனைவரையும் இலங்கைத் தாய் நாட்டையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாக்குமாறும் நாட்டு மக்கள் அனைவரும் சுகம் பெற்று நலமடைய வேண்டியும் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு சகல பள்ளிவாயல்களும் வேண்டப்படுகின்றன.

2. அந்த வகையில் தனிப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத பிரதேசங்களில் அனைத்து ஜும்ஆ/ பிரதான பள்ளிவாசல்களில் இந்த விசேட துஆப் பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

3. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில உள்ள மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு பிரதான பள்ளியில் மாத்திரம் இவ்விஷேட பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்படுதல் போதுமானது.

4. முகக்கவசம் (Mask) அணிவது, 01 மீட்டர் இடைவெளி பேணுவது, சவர்காரமிட்டு கைகளைக் கழுவிக் கொள்ளுதல் அல்லது கிருமி நீக்கி பாவித்து கைகளை சுத்தம் செய்து கொள்தல் உட்பட அனைத்து கொவிட் – 19 சுகாதார நியமங்களையும் கட்டாயம் பேணுதல் வேண்டும். (திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.)

5. பின்வரும் ஒழுங்குகள் பேணப்படுவது வரவேற்கப்படுகிறது:

அ) கட்டாயம் மொத்தமாக 25 பேர் மட்டும் கலந்து கொள்ளுதல்.

ஆ) கலந்து கொள்வோரில் 20 அல்லது அதற்கு மேற்பட்டோர் குர்ஆனையும் துஆக்களையும் சரியாக உச்சரிக்கக் கூடிய உலமாக்கள் அல்லது மத்ரஸா மாணவர்களாக இருத்தல்; 5 அல்லது அதற்கு குறைந்தோர் அரசியல் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பள்ளி நிருவாகிகளாக இருத்தல்.

இ) அனைவரும் வெள்ளை ஆடையும் தொப்பியும் அணிந்திருப்பது சிறந்தது.

ஈ) குர்ஆன், சலவாத்து, மற்றும் துஆக்கள் ஓதுவதைத் தவிர்ந்த ஏனைய எதுவிதமான உரைகளும் இடம்பெறக் கூடாது.

உ ) சூரா யாசீன், துஹான், ஸாப்பாத் போன்ற குர்ஆனின் சூராக்களில் ஏதாவதொன்றையும், நபிகளார் மீது சலவாத்துக்களையும், துன்ப துயரங்களின் போது ஓதக்கூடிய துஆக்களையும் ஓதுதல்.

ஏ. பீ. எம். அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.