குணமடைந்த கொரோனா நோயாளிகளை வெளியேற்றும் முறைமையில் திருத்தம்!

குணமடைந்த கொரோனா நோயாளிகளை வெளியேற்றும் முறைமையில் திருத்தம்!

உலகளாவிய பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கையின் சுகாதார அமைச்சு, உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளை குணமானவர்களாக கருதி வெளியேற்றுவதற்கான அளவுகோல்களில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, கொரோனா கண்டறியும் பரிசோதனையிலிருந்து 14 நாட்கள் ஒருவர் கொரோனா அறிகுறியில்லாமல் இருந்தால் அவருக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படாமலேயே அவர் குணமானவராக அறிவிக்கப்பட்டு சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

$ads={2}


எனினும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைத் தொடர்ந்து பி.சி.ஆர் பரிசோதனையைப் பற்றி குறிப்பிடாமல் நோயாளிகளை வெளியேற்றுவது பாதகமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போது கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றுவதற்கு SARS-CoV-2 PCR ± என்டிபொடி சோதனை தேவைப்படுகிறது.

எனினும் 14 நாட்கள் அறிகுறியில்லாத நிலையில் நோயாளிகளை குணமானவர்களாக கருதி வெளியேற்றும் தற்போதைய போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் இது நடைமுறை சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் பீடத்தின் நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியர் நீலிகா மாலவிகே, ஏனைய நாடுகளில், இதுபோன்ற நோயாளிகள் மேலதிக பரிசோதனைகள் இல்லாமல் 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்,

எனினும் இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்களுக்குப் பிறகே அறிகுறியில்லாதவர்கள் குணமானவர்களாக கருதி வெளியேற்றப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.