விற்பனையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! -மதுர விதானகே எம்.பி

விற்பனையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! -மதுர விதானகே எம்.பி

Madhura Vithanage

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் இலாப நோக்கத்திற்காக செயற்படும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.


பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கொரோனா வைரஸ் தாக்கம் சிறந்த முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படும்.


$ads={2}


கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் எதிர்க் கட்சியினர் எவ்விதத்திலும் ஒத்துழைப்பு  வழங்கவில்லை.


நெருக்கடியான சூழ்நிலையில் இலாப நோக்கத்தை கருத்திற்கொண்டு பொருட்களை அதிக விலைகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


எதிர்வரும் வாரம்  தொடக்கம் அரசியல் ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post