குருணாகல் பிரதான பஸ் தரிப்பிட தொலைக்காட்சியில் ஆபாசப்படம்?!

குருணாகல் பிரதான பஸ் தரிப்பிட தொலைக்காட்சியில் ஆபாசப்படம்?!


குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருணாகல் மாநகர சபை எல்லையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பபட்ட நிலையில் மூடப்பட்டுள்ள பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள தொலைக்காட்சித் திரை ஒன்றில் ஆபாசப் படம் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் விசாரணையை நடத்துமாறு குருணாகல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


மாநகர மேயர் துஷார சஞ்சீவ விதாரண இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.


$ads={2}


தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக பிரதான பஸ் தரிப்பிடத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், அதில் பாலியல் உறவுக் காட்சிகள் அடங்கிய ஆபாச வீடியோ காட்சிப்படுத்தப்படுவதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையிலேயே, இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்தி இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு மாநகர மேயர் அறிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post