இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் நிலையை அண்மித்துவிட்டது! -வைத்தியர் பாலித கருணாபிரேம

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் நிலையை அண்மித்துவிட்டது! -வைத்தியர் பாலித கருணாபிரேம


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் நிலையை அண்மித்துவிட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளார் விசேட வைத்தியர் பாலித கருணாபிரேம தெரிவித்தார்.

மேற்படிப் பணியகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கொரோனா வைரஸ் பரவல் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் முதலாம் மட்டத்தில் வெளிநாட்டவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று சொற்ப அளவில் பரவியதாகவும் இரண்டாம் மட்டமானது நாட்டில் பரவலாகப் பரவாத கொத்தணி பரவல் என்றும் தெரிவித்தார்.

மூன்றாம் கட்டத்தில் பல கொரோனா கொத்தணிகள் உருவாகும் என்பதுடன் நான்காம் கட்டத்தில் கொத்தணி பரவலுடன் அது சமூகத் தொற்றாக மாறும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலைகளை முறையே பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வர்ணங்களாக அடையாளப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இலங்கையானது தற்போது மூன்றாம் நிலையை அண்மித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

$ads={2}

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் அமல்படுத்தப்படாத பகுதிகளிலும் அரச வைத்தியசாலைகள் எந்நேரமும் திறந்திருக்கும் என்பதால் யாருக்காவது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற அவசர நிலைமைகள் ஏற்படும்பட்சத்தில் அவர்களை மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிப்பதனூடாக அம்பியுலன்ஸ் வண்டியின் மூலம் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்கான வசதி வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post