மேலுமொரு தொற்றுநோயை எதிர்கொள்ள தயாராகுங்கள்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலுமொரு தொற்றுநோயை எதிர்கொள்ள தயாராகுங்கள்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!


கொரோனா வைரஸை அறிவியல் மற்றும் விரிவான சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறையால் தோற்கடிக்க முடியும் என்பதை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளதுடன் மேலுமொரு தொற்றுநோய்க்கு உலகம் தயாராக வேண்டும் என எச்சரித்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 4.7 கோடிக்கும் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 12 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது உயிரை இழந்துள்ளனர்.


இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்,


உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கொரோனா போன்ற எதிர்கால அவசர நிலைகளை கவனித்துக் கொள்வதற்கான ஒரு வரைவு தீர்மானத்தை உலக சுகாதார சபை பரிசீலித்து வருகிறது.


இந்த வரைவு சுகாதார அவசர நிலைகளுக்கான ஆயத்தத்தை வலுப்படுத்தும் மற்றும் சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு இணக்கமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது.


இது உலகளாவிய நெருக்கடி என்றாலும் பல நாடுகளும் நகரங்களும் ஒரு விரிவான ஆதார அடிப்படையிலான அணுகுமுறையுடன் வெற்றிகரமாக பரவலை தடுக்கின்றன அல்லது கட்டுப்படுத்தியுள்ளன.


$ads={2}


எமக்குத் தேவையான தடுப்பூசிகள், நோயறிதல்கள் மற்றும் சிகிச்சை முறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் அவை அனைத்து நாடுகளுக்கும் சமத்துவத்தின் அடிப்படையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் ஒரு திட்டத்தின் பின்னால் உலகம் முதன்முறையாக அணிதிரண்டுள்ளது.


அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் இப்போது தயாராக வேண்டும். இது தொடர்பாக உலக சுகாதார சபை சர்வதேச சுகாதார விதிமுறைகளுடன்  மிகவும் வலுவான இணக்கத்தின் மூலம்கொரோனா போன்ற சுகாதார அவசரநிலைகளுக்கான தயார்நிலையை வலுப்படுத்தும் ஒரு வரைவு தீர்மானத்தை பரிசீலிக்கும்.


இந்த தீர்மானம் உலகளாவிய சுகாதார சமூகத்தை கொரோனா மற்றும் பிற ஆபத்தான தொற்று நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க அனைத்து நாடுகளும் சிறந்த முறையில் இருப்பதை உறுதி செய்யுமாறு கோருகிறது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.