முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று (03) உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மாறாக அவர் வரவுசெலவு திட்டம் சமர்ப்பிக்க முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு பின்னர் நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் நாடாளுமன்றம் செல்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேசியப்பட்டியல் எம்.பி ஜெயந்த கெட்டகொட பதவியை இராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.