ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த மற்றுமொரு சிறுவன்- மீட்பு பணிகள் தீவிரம்!!

ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த மற்றுமொரு சிறுவன்- மீட்பு பணிகள் தீவிரம்!!


இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 03 வயது குழந்தையை மீட்கும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.


மத்திய பிரதேசம் நிவாடி மாவட்டத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது புராபுஜுர்க் என்ற கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த குஷ்வாஹாவின் மகன் பிரஹ்லாத் என்ற 03 வயது சிறுவன் புதிதாக தோண்டப்பட்டு இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளார்.


கிணற்றில் 100 அடியில் தண்ணீர் உள்ளதால் சிறுவன் எத்தனை அடி ஆழத்தில் சிக்கியுள்ளான் என்பது தெரியவில்லை. அவனை மீட்கும் பணிகள் இன்று அதிகாலையில் இருந்து நடந்து வருகின்றன.


$ads={2}


இந்நிலையில், நேற்று முழுவதும் நடந்த போராட்டத்தை அடுத்து இன்றும் இரண்டாவது நாளாக மீட்புப் படையினர் சிறுவனை உயிருடன் மீட்க போராடி வருகின்றனர்.


தமிழகத்தில் கடந்தவருடம் சுர்ஜித் என்ற சிறுவன் வீழ்ந்து மீட்பு பணிகள் தோல்வியடைந்த நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.