கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு இலங்கை தயார் இல்லை? சரத் பொன்சேகா கேள்வி!

கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு இலங்கை தயார் இல்லை? சரத் பொன்சேகா கேள்வி!


உலக சுகாதார அமைப்பு விரைவில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்த கொரோனாவுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள 2021 வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்றைய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


இந்த தடுப்பூசிகள் கிடைக்கும் போது அவற்றை பயன்படுத்துவதற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்பாடுகளை செய்துள்ளன.


அமெரிக்கா ஒரு இராணுவ ஜெனரல் தலைமையிலான குழுவை நியமித்து தடுப்பூசி விநியோகிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் நிறுவனங்களை கூட அவர்கள் தயார் செய்துள்ளனர். அத்துடன் இந்த செயல்முறைக்கு அமெரிக்கா 26 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. 


$ads={2}


இந்நிலையில், இந்த செயல்முறைக்கு குறைந்த பட்சம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாவது (ரூ. 180 பில்லியன்) ஒதுக்கப்பட வேண்டும்.


எனினும் வரவுசெலவுத்திட்டத்தில் கொரோனா தொற்றுநோயை எதிர்ப்பதற்காக 16 பில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post