முன்பள்ளிக் கல்வி குறித்த கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது!

முன்பள்ளிக் கல்வி குறித்த கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது!


முன்பள்ளிக் கல்வி குறித்து தேசிய கொள்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் நேற்று (20) இடம் பெற்றுள்ளது.


நாட்டின் கல்வி முறைமையில் முன்பள்ளிக் கல்வியின் முன்னுரிமை மற்றும் நிபுணத்துவத்தை மையமாகக் கொண்டு முன்பள்ளிக் கல்வி குறித்த தேசிய கொள்கை வகுக்க இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.


$ads={2}


இதன்போது, ஆரம்பக் கல்வித் துறையில் நிபுணர்களின் ஆலோசனைகளின் படி தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வரைவு குறித்து ஆராய்ந்து பார்த்து இறுதி தீர்மானம் எடுக்க மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.


அதன்படி, குறித்த குழுவின் பரிந்துரைகளுடன் இது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கக் கல்வி அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி அன்று இந்தக் குழு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post