அடுத்த வாரம் பாடசாலைகள் மீள் ஆரம்பிக்கும் பகுதிகள் தொடர்பான அறிவித்தல்!

அடுத்த வாரம் பாடசாலைகள் மீள் ஆரம்பிக்கும் பகுதிகள் தொடர்பான அறிவித்தல்!

வடமேல் மாகாணத்திற்குள் கொரோனா அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி திறக்கப்படாது என ஆளுநர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார்.

மேலும், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் கொரோனா அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்க மேலும் ஒருவாரம் செல்லும் என ராஜா கொலுரே தெரிவித்துள்ளார்.

$ads={2}

இதன்படி, குருணாகல் நகரசபை எல்லைப்பகுதி, குருணாகல் MOH பகுதி, மல்லவபிட்டிய பகுதி, குளியாபிட்டிய நகர சபை எல்லைகள், பன்னல நகர சபை எல்லைகள், ஈரியகொல, ரம்பொடகல, நாரம்மால, மஹாவ, கஜனேகம, அம்பகஸ்வேவ, பலால்ல, யபாஹுவா ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தின் பாடசாலைகளை 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் மீண்டும் திறக்க மாவட்ட செயலாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post