கர்ப்பிணி தாய்மார்களுக்கான குடும்ப சுகாதார பணியகத்தின் விசேட அறிவித்தல்!!

கர்ப்பிணி தாய்மார்களுக்கான குடும்ப சுகாதார பணியகத்தின் விசேட அறிவித்தல்!!


இலங்கையில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் கர்ப்பிணிகளுக்கும் அது தொற்றாது என்பதற்கு எந்தவித விதி விலக்கும் இல்லை.


ஏனெனில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதுகாப்புத் தேடி வந்த கர்ப்பிணி ஒருவருக்கும் கொரோனா தொற்றியமை கண்டறியப்பட்டுள்ளது.


இந்த நிலையில் கர்ப்பிணி தாய்மாரை பாதுகாக்கும் வகையில் குடும்ப சுகாதார பணியகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


$ads={2}


அதாவது காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம்,யோசி இரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம், கருவின் அசைவு குறைதல், மயக்கம் அல்லது சுயநினைவு இழப்பு, வலிப்பு, கடுமையான வயிற்று வலி, உடல் வீக்கம், கடுமையான தலைவலி ஆகிய நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வைத்தியசாலைக்கு செல்லுமாறும் கர்ப்பிணி பதிவேட்டை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.