அத்தியாவசிய பொருட்களுடன் மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்கும் பாரவூர்திகளுக்கு அனுமதிப் பத்திரம் அவசியமில்லை!

அத்தியாவசிய பொருட்களுடன் மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்கும் பாரவூர்திகளுக்கு அனுமதிப் பத்திரம் அவசியமில்லை!

மரக்கறி, பழங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுடன் மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்கும் பாரவூர்திகளுக்கு ஊரடங்கு அனுமதிப் பத்திரம் அவசியமில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி காரியாலயத்தில் இன்று (05) இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

$ads={2}

அத்துடன், பொருளாதார மையங்களை மொத்த விற்பனைக்காக மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறுகின்றனவா என்பதனை கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.