சுகாதார அமைச்சர் கடலில் பாயப்போகிறார் என்ற செய்தியை கேட்ட திமிங்கிலங்கள் பயந்து கரை ஒதுங்கின! -நளின் பண்டார

சுகாதார அமைச்சர் கடலில் பாயப்போகிறார் என்ற செய்தியை கேட்ட திமிங்கிலங்கள் பயந்து கரை ஒதுங்கின! -நளின் பண்டார


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கடலில் பாயப்போகிறார் என்ற செய்தியை கேட்டு பயந்தே திமிங்கலங்கள் கடலில் இருந்து வந்து கரையொதுங்கியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்தக் கருத்தை இன்று (05) செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்காக தமது உயிரையும் அர்ப்பணிக்க தயார் என்று பவித்ரா வன்னியாரச்சி அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.


இதனைக்கொண்டே நளின் பண்டார தமது கருத்தை இன்று வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, தம்மை அர்ப்பணிப்பதை காட்டிலும் முதலில் தமது தொழிலை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்.


$ads={2}


கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியவில்லை என்றால் கடலில் பாயும் எண்ணம் பவித்ராவுக்கு இருக்கக்கூடும்.


பவித்ரா கடலில் பாயப்போவதாக தெரிவித்த செய்தியை கேட்டே பாணந்துறை கடலில் அண்மையில் பல திமிங்கலங்கள கரையொதுங்கியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.