மூச்சு விடுவதில் சிரமம்; 18 வயது மாணவி தற்கொலை!

மூச்சு விடுவதில் சிரமம்; 18 வயது மாணவி தற்கொலை!


யாழில் 18 வயது மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


$ads={2}


இவர் தொடர்ச்சியாக மூச்சுவிடுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ள நிலையில் தாயாரிடமும் கூறியுள்ளார்.


தாயார் வைத்தியசாலை செல்வோம் எனக் கூறியிருந்த போதும் அந்த மாணவி மூச்சடைப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தாயார் இல்லாத நேரம் பார்த்து தவறான முடிவினை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து உறவினர்களால் அவர் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்ததுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post