தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீட்டுக்கு வந்தவர் திடீர் மரணம்!! புத்தளத்தில் சம்பவம்!

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீட்டுக்கு வந்தவர் திடீர் மரணம்!! புத்தளத்தில் சம்பவம்!

புத்தளம் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர், திடீரென வீதியோரத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீட்டுக்கு வந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இன்று (05) இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

புத்தளம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பி. குமாரதாச, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சந்ரா பெர்ணான்டோ, மேற்பார்வை பொதுச் சுகாதார உத்தியோகத்தர் என். சுரேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

$ads={2}

கெட்டிப்பொலவில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று (04) தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று வீட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர். 

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டமைக்கான சான்றிதழ், கெட்டிப்பொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் வழங்கப்பட்டுள்ளதாக புத்தளம் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் என். சுரேஷ் தெரிவித்தார்.

நபரின் சடலம் சுகாதார அறிவுறுத்தலின் பிரகாரம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் இரத்த மாதிரிகள் PCR பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுமென புத்தளம் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post