இலங்கையில் வாழும் குழந்தைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கை!

இலங்கையில் வாழும் குழந்தைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கை!


இலங்கையில் உத்தியோகபூர்வ வறுமை வீதம் மிகக் குறைவாக இருக்கும் போதும் பெரும்பான்மையான குழந்தைகள் நிதி ரீதியாகப் போராடும் குடும்பங்களில் வாழ்வதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.


36 சதவீத குழந்தைகள் நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 278 ரூபாவை மாத்திரமே செலவிடும் குடும்பங்களில் வாழ்கின்றனர்.


அத்துடன் 74 சதவீத குழந்தைகள் நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 506 ரூபாவை செலவிடும் குடும்பங்களில் வாழ்வதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.


$ads={2}


தமது ஆய்வுகளின் படி இலங்கையில் சிறுவர்களை முன்னேற்றுவதற்காகக் கடந்த 10 ஆண்டுகளில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


எனினும் சிறுவர்கள் எங்கு வாழ்கிறார்கள். அவர்கள் எந்த அடிப்படையில் குடும்பத்தில் தங்கியுள்ளார்கள் மற்றும் அவர்களின் குடும்ப சூழ்நிலை என்பவற்றுக்கும் இடையில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் குறிப்பிட்டுள்ளது.


இலங்கையின் 70 வீதமான வீடுகளில் தமது உணவுத் தேவைக்காக 40 வீதமான செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.


இதன் காரணமாகக் குறித்த வீடுகளில் சிறுவர்களுக்கான முதலீடுகளின் திறன் வரையறுக்கப்படுகிறது. இந்த நிலைமை கொரோனா வைரஸ் தாக்கத்துடன் மேலும் மோசமாகியுள்ளது.


உணவுக் கொள்ளளவைக் கட்டுப்படுத்தல், போசாக்கு மிக்க உணவில் குறைபாடு அதிகரித்துள்ளமை, செலவுகளுக்காகத் தங்க ஆபரணங்களை அடகு வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நிகழ்வுகளும் குடும்பங்கள் மத்தியில் தாக்கம் செலுத்துவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கூறியுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post