கொழும்பு அணியின் தலைமை பயிற்சிவிப்பாளருக்கு கொரோனா!!!

கொழும்பு அணியின் தலைமை பயிற்சிவிப்பாளருக்கு கொரோனா!!!

லங்கா பிரீமியர் லீக்கின் அணிகளில் ஒன்றான கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சிவிப்பாளர் கபீர் அலி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.


$ads={2}


டேவ் வாட்மோர் லங்கா பிரீமியர் லீக்கில் இருந்து விலகியதை அடுத்தே இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கபீர் அலி கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

எனினும் அவர் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானதால் குறித்த போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதுவரையில் குறித்த அணிக்கு அடுத்த பயிற்றுவிப்பாளர் யார் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 சுற்றுத் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post