இலங்கையில் மீண்டும் மலேரியா! - மக்களே அவதானம்!!

இலங்கையில் மீண்டும் மலேரியா! - மக்களே அவதானம்!!

பிபில - மஹியங்கனை கம்பஹா ஆகிய பிரதேசங்களில் மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலேரியா நோய் பரவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட மொனராகலை பிரதேச மலேரியா அதிகாரி வைத்தியர் கருணாசேன,


$ads={2}

பிபில பிரதேசத்தில் குளம் நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மலேரியாா நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இதற்கு முன்னர் உகண்டாவில் பணியாற்றி மீண்டும் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். இலங்கை வந்தவர்கள் இங்கும் பணியாற்றியுள்ளனர்.

இதன் போது ஏற்பட்ட நோய் அறிகுறிகளின் பின்னரான பரிசோதனையில் மலேரியா நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் மலேரியா நுளம்புகளினால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பரவலாக தெரிவு செய்யப்படும் பொது மக்களிடம் இரத்த மாதிரி பெற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

அங்கு மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், நுளம்புகள் ஊடாக நோய் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக வைத்தியர் கருணாசேகர தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post